விழி கிடைக்குமா பாடல் வரிகள்
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2)
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2)
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்(2)
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா
விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா..
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா..
